நாடு முழுவதும் அதிகரித்து வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒரு சில மாநிலங்களில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அந்தவகையில் தமிழகத்திலும் தோற்று குறைந்துள்ளது. இதனால் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
இந்நிலையில் கேரள மாநிலத்தில் கொரோனா அதிகரித்து வருகிறது. இதனால் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கட்டாயம் இ-பாஸ் தேவை என்று கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார். கேரள எல்லையை ஒட்டியுள்ள 13 சோதனைச் சாவடிகளும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் வந்தால் மட்டுமே கோவை மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவித்துள்ளார்.