Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எப்போ தான் திருத்துவங்க… போலீஸை கண்டு தெறித்தது ஓட்டம்… மடக்கி பிடித்து விசாரணை…!!

ராமநாதபுரத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் தப்பியோடிய நிலையில் ஒருவரை மடக்கி பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கை எடுத்தும் சட்ட விரோதமாக சூதாடுவது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்செல்வம் தலைமையில் காவல்துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காரிக்கூட்டம் செல்லும் பகுதியில் உள்ள மரத்தடியில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டது போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

இதனையடுத்து போலீஸ் வருவதை பார்த்த அங்கிருந்தவர்கள் தப்பியோடியுள்ளனர். இதனை தொடர்ந்து காரிக்கூட்டத்தை சேர்ந்த சீனி மீரான்கனியை போலீசார் மடக்கி பிடித்துள்ளனர். மேலும் தப்பியோடிய அப்பாஸ், சிக்கந்தர், சாத்தன்குளத்தை சேர்ந்த சாதிக், யூசுப், சாதிக் ஆகிய 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். இந்நிலையில் சூதாடுவதற்கு பயன்படுத்திய 1,250 ரூபாயை மீரானிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |