அதிகமான விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரூர் பகுதியில் தனியார் உரை கடைகளில் களைக்கொல்லி மருந்துகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வேளாண்மை இணை இயக்குனர் வசந்தரேகா, வேளாண்மை தரக்கட்டுப்பாடு உதவி இயக்குனர் தாம்சன், வேளாண்மை உதவி இயக்குனர் மோகன் சகாயராஜ் ஆகியோர் உரம், பூச்சி மருந்து விற்பனை கடைகளில் திடீர் ஆய்வு செய்துள்ளனர். அப்போது உரம், பூச்சி மருந்து விற்பனை, விலை விவரம் குறித்து விவசாயிகளுக்கு தெரியும்படியாக இருக்கிறதா என்றும் பூச்சி களைக்கொல்லி மருந்து இருப்புகள், கொள்முதல் பட்டியல், விவசாயிகளுக்கு விற்பனை செய்த ரசீதுகள் போன்றவை குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மேலும் பொருட்களை விற்கும் போது விவசாயிகளுக்கு ரசீது வழங்க வேண்டும் என்றும் உரங்களை அரசு கூறிய விலையில் விற்க வேண்டும் என அதிகாரிகள் கடை உரிமையாளரிடம் தெரிவித்துள்ளனர். அதன்பின் அதிக விலைக்கு பூச்சிமருந்து, களைக்கொல்லி விற்கப்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், விற்பனை தடை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடை உரிமையாளருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே விவசாயிகள் தாங்கள் வாங்கக்கூடிய இடுபொருட்களுக்கு ரசீது கேட்டு வாங்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.