மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் ரவுடியை கத்தியால் சரமாரியாக வெட்டியதில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .
திருவள்ளூர் மாவட்டம் புதுகும்மிடிப்பூண்டியில் பாலீஸ்வரன் கண்டிகை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ரிஸ்க் பாஸ்கர். இவர் ஏற்கனவே கொலை ,கொள்ளை போன்ற பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் சிறையிலிருந்து வெளியே வந்த அவர் கடந்த 4-ஆம் தேதியன்று பாலீஸ்வரன் கோவில் எதிரே உள்ள காலி மைதானத்தில் தனது நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மற்றொரு ரவுடி ஜெகன் என்பவர் பாஸ்கரை கத்தியால் சரமாரியாக வெட்டினார்.
இதில் பலத்த காயமடைந்த ரிஸ்க் பாஸ்கர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல்துறையினர் இவருடைய நண்பர்கள் ஜெகன் (28),கார்த்திக் (28) , வினோத்(26) மற்றும் பிரேம்குமார் (32) ஆகிய 4 பேரையும் ஏற்கனவே கைது செய்துள்ள நிலையில், தற்போது இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர் .