தஜிகிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட நில அதிர்வினால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஜிகிஸ்தான் நாட்டிலுள்ள ரஷீத் நகரின் தெற்கில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது குஜிட் நகரின் தென்கிழக்கில் 153 கிலோமீட்டர் தொலைவில் 40 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது என மத்திய தரைக்கடல் புவியியல் மையம் கூறியுள்ளது. மேலும் இது ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் சரிந்து விழுந்துள்ளன. இதில் சிக்கி 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என தஜிகிஸ்தான் அரசு கூறியுள்ளது.