Categories
மாநில செய்திகள்

சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு…. ராதாகிருஷ்ணன் அதிரடி உத்தரவு…!!!

கேரளாவில் ஜிகா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் தமிழகத்திலும் ஜிகா, டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சுகாதாரத் துறை பணியாளர்கள் வீடு வீடாக சென்று சோதனை மேற்கொள்ள வேண்டும். பேருந்து நிலையங்கள், மூடப்படாத கால்வாய்கள், தேங்கி இருக்கும் நீர், பழைய டயர் ஆகிய பொருட்களை உடனடியாக தூய்மைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஜிகா, டெங்கு காய்ச்சல்கள் வருவதற்கு முன்பாகவே முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்றும், மேலும் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரத்தம், படுக்கைகள், மருந்துகள் ஆகியவற்றின் இருப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |