ஆப்கானிஸ்தான் நாட்டின் 85% பகுதியை கைப்பற்றி தாலிபான்கள் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் இருபது ஆண்டுகளாக அமெரிக்க படையினர் இருந்துள்ளனர். இதனை அடுத்து அமெரிக்க நாட்டின் அதிபர் ஜோ பைடனின் உத்தரவிற்கு இணங்கி அமெரிக்க படையினர் தங்கள் சொந்த நாட்டிற்கே திரும்ப உள்ளனர்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் 85 சதவிகித பகுதியை தாலிபான்கள் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இதனை அந்த பயங்கரவாதிகள் படையின் ஒருவரான ஷாஹபுதீன் திலவர் அறிவித்துள்ளார்.