தமிழகத்தில்கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு கட்டுப்பாடுகளுடன் நடைமுறையில் இருக்கிறது. ஊரடங்கினால் தொற்று குறைந்து வருவதால் தளர்வுகள் வருகிறது. அந்தவகையில் அனைத்து வகையான ஜவுளி கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அனைத்தும் 50% வாடிக்கையாளர்களுடன் 9 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் கொரோனா விதிமுறையை மீறியதாக டி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்க்கு சென்னை மாநகராட்சி ரூபாய் 5 லட்சம் அபராதம் விதித்துள்ளது.