பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் மத்திய ,மாநில அரசுகளை கண்டித்து அறிவொளி பூங்கா எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் இரா.அருள், பிரேம்குமார் , எம். நாகராஜ் மற்றும் எஸ்.சுரேஷ் ஆகியோர் தலைமை தாங்கியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். மேலும் இந்த விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பேருந்து நிலையத்திலிருந்து மாடுகள் மூலம் ஆட்டோவை கட்டி இழுத்துச்சென்று நூதன முறையில் எதிர்ப்பை தெரிவித்தனர்.