மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற இடமாற்றங்களை சந்திக்க வேண்டியதிருக்கும்.
கூடுதல் பொறுப்புகள் ஏற்படுவதால் அதிகநேரம் உழைக்க வேண்டியதிருக்கும். இதனால் உடல்நிலை சற்று சோர்வடையும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். மருத்துவச் செலவுகளும் ஏற்படக்கூடும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. வாழ்க்கைத் துணையுடன் விவாதங்களை மேற்கொள்ளாதீர்கள். அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். யாரையும் விமர்சனங்கள் செய்ய வேண்டாம். உத்தியோகத்தில் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டியதிருக்கும்.
காரியத்தில் தாமதத்தையும் சந்திக்க வேண்டியதிருக்கும். பணவிஷயத்தில் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். வாக்குறுதிகளை தவிர்க்கவேண்டும். பெரியவர்களை மதித்து நடக்கவேண்டும். காதலில் உள்ளவர்களுக்கு இன்றையநாள் நல்ல நாளாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணியவேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் வாருங்கள், இன்றையநாள் மிகவும் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.