Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் ரசிகர்களுக்கு…. அடுத்த மகிழ்ச்சி அறிவிப்பு…. போடு செம…..!!!!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் பீஸ்ட் படத்தின் முதல் பாடலுக்கு சிவகார்த்திகேயன் வரிகள் எழுதப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தின் இசையில் உருவான “கல்யாண வயசு” “செல்லம்மா” “சோ பேபி” போன்ற பாடல்களுக்கு சிவகார்த்திகேயன் வரிகள் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக டாக்டர் படத்தின் பாடலிலும் அனிருத், சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் திலீப்குமார் ஆகியோர் இணைந்து மேக்கிங் வீடியோவில் சிறப்பான நகைச்சுவையுடன் கொண்டு சென்றிருந்தனர். இந்த வீடியோ ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது பீஸ்ட் படத்தின் பாடலுக்கும் சிறப்பான மேக்கிங் வீடியோவை இவர்கள் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

Categories

Tech |