Categories
தேசிய செய்திகள்

4 ரூபாய் ஜிஎஸ்டி போட்டதால் 20,000 ரூபாய் அபராதம்… அதிரடி உத்தரவு….!!!!

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவை சேர்ந்த கார்க் என்பவர் கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் உணவு விநியோகம் செய்யும் ஸ்விகி நிறுவனத்தில் மொபைல் மூலமாக உணவு ஆர்டர் செய்துள்ளார். ரூ.144 மதிப்பிற்கு உணவுடன் 3 குளிர்பானங்களை 90 ரூபாய்க்கு ஆர்டர் செய்துள்ளார். கார்க் ஏற்கனவே எம்.ஆர்.பி விலைக்கு மேல் பணம் செலுத்தியிருந்தாலும் குளிர்பானத்திற்கு ஜி.எஸ்.டியாக ரூ.4.50 வசூலிக்கப்பட்டதை உணர்ந்தார். நுகர்வோர் பொருட்கள்  சட்டம், 2006 இன் கீழ் சட்டவிரோதமானது என்று நுகர்வோர் ஆணையத்தில் வாதிட்டார்.

இதற்கு ஸ்விகி தரப்பில், நாங்கள் ஒரு இடைத்தரகர் மட்டுமே. வணிகர் சார்பாகவே கட்ணம் வசூலிக்கிறோம். வணிகர்களே மசோதாவில் பொருந்தக்கூடிய அனைத்து வரிகளை வசூலித்தவர். எனவே எங்கள் தரப்பில் சேவையில் எந்த குறைபாடும் இல்லை என்று விளக்கமளித்தனர். இந்த வாதங்களை கேட்ட ஆணையம், எது எப்படி இருந்தாலும் ஸ்விகி தனது வாடிக்கையாளர்களுக்கு உதவி செய்யும் சேவை செய்கிறது. ஸ்விகி ஒரு ஆன்லைன் உணவு சேவை. விநியோக நோக்கத்திற்காக சம்பந்தப்பட்ட விற்பனையாளர் / விற்பனையாளருக்கு அனுப்புவதற்கும் வாங்குபவருக்கும் விற்பனையாளருக்கும் இடையேயான இணைப்பாக செயல்படுகிறது. இது நிச்சயமாக ஒரு தொண்டு நிறுவனம் அல்ல.

ஆகவே தரமற்ற மற்றும் குறைபாடுள்ள சேவைகளில் ஸ்விகி மீதான குற்றம் சரியானதே எனக் கூறி புகார் தாக்கல் செய்தவரிடம் வசூலிக்கப்ப்டட் 4.50 ரூபாயை புகார் தாக்கல் செய்த நாளிலிருந்து 9 சதவீதம் வட்டியுடன் கொடுக்குமாறு உத்தரவிட்டது. இந்த சம்பவத்தால் மனவேதனை மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளான கார்க்கு ரூ.10,000 செலுத்துவதை தவிர ஹரியானா மாநில குழந்தைகள் நல கவுன்சிலின் கணக்கில் ₹ 10,000 டெபாசிட் செய்யவும் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |