பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது என்பது நீண்டகாலமாகவே நடைமுறையில் இருக்கிறது. போதிய நிதி இல்லாமல் கடனில் சிக்கி தவிக்கும் நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்து அதன் மூலமாக நிதி திரட்டும் வழக்கத்தை மத்திய அரசு கொண்டிருக்கிறது. அதன்படி பொதுத் துறையில் இருக்கும் 10 வங்கிகளை 4 பெரிய வங்கிகளாக இணைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி பாங்க் ஆப் மகாராஷ்டிரா, பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா ஆகியவற்றை இணைத்துள்ளது.
இந்த நான்கு வங்கிகளின் IFSC code விவரங்கள் புதிதாக மாறியுள்ளன. ஜூலை 1ஆம் தேதி முதலே வாடிக்கையாளர்கள் ஐஎப்எஸ்சி கோடு புதிதாக பயன்படுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்னும் சிலர் மாற்றாமல் இருக்கின்றனர். இதை செய்யாமல் பணம் அனுப்பவும் மற்ற பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாது. எனவே உடனடியாக வாடிக்கையாளர்களை IFSC CODE-ஐ மாற்றுமாறு வங்கிகளின் தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்த வங்கியின் ஐஎப்எஸ்சி கோடு மாற்ற வேண்டுமோ அந்த வங்கியின் இணையதள பக்கத்தில் சென்று வாடிக்கையாளர்கள் மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.