Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மருந்து வாங்க சென்ற போது… பெண்ணுக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மருந்து வாங்குவதற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வேப்பலோடை பகுதியில் ஆசீர்வாத செல்லையா என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ரூபி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ரூபி மருந்து வாங்குவதற்காக  தனது உறவினரான சோலையப்பன் என்பவருடைய மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு திரும்ப வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது ரூபி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளானது திடீரென பழுதாகியதால் அங்குள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விட்டது. இந்த விபத்தில் சோலையப்பன் மற்றும் ரூபிக்கு பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று  பலத்த காயமடைந்த இருவரையும் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு ரூபிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று ரூபியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |