தடையை மீறி மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்ததோடு அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களில் அனுமதி இல்லாமல் மது பாட்டில்கள் கடத்தி சென்று விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவின்படி காவல்துறையினர் பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுப்பட்டு கொண்டிருக்கும்போது அனுமதி இல்லாமல் மது விற்பனை செய்து கொண்டிருந்த 12 பேரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து விட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தியதோடு அவர்கள் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 64 மது பாட்டில்களை பறிமுதல் செய்து உள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிந்த காவல்துறையினர் அனுமதி இல்லாமல் மது விற்பனை செய்த குற்றத்திற்காக அவர்களை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.