பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து மக்கள் நீதி மையம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வினை கண்டித்து பல்வேறு இடங்களில் மத்திய, மாநில அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள இளைஞரணி செயலாளர் பிரகாஷ் மற்றும் ஆதிதிராவிட நல அணி செயலாளர் பாரத் ஆகியோரின் தலைமையில் பெட்ரோல், டீசல், மற்றும் சமையல் எரிபொருளின் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் திடீரென போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் ரங்கநாதன், துணை செயலாளர் ஜவகர் ஆகியோரின் முன்னிலையில் அலெக்ஸ், சேகர், பொதுமக்கள் என பலரும் பங்கேற்றுள்ளனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மத்திய, மாநில அரசை எதிர்த்தும், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.