Categories
உலக செய்திகள்

பதற வைத்த நிலநடுக்கம்…. ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு…. அச்சத்தில் மக்கள்…!!

இந்தோனேசியா நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இந்தோனேசியா நாட்டின் வடக்கில் சுலவேசி தீவின் அருகில் மானடோ நகரம் உள்ளது. இந்த மானடோ நகரில் பலம் வாய்ந்த  நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கமானது 60 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது எனவும்  ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் எந்தவித சுனாமி எச்சரிக்கையும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த நிலநடுக்கத்தினால் மக்கள் தங்களது வீடுளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். மேலும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பு விபரங்கள் குறித்து முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

Categories

Tech |