சட்டவிரோதமாக கஞ்சாவை வாங்கிச் சென்ற வாலிபரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அம்மாபட்டினம் பகுதியில் மணமேல்குடி காவல் துறையினர் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆதிபட்டினம் பகுதியில் வசிக்கும் முஜிபுர் ரகுமான் என்பவர் இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்துள்ளார்.இந்நிலையில் காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்துள்ளது.
மேலும் முஜிபுர் ரகுமான் அந்த கஞ்சா பொட்டலங்களை புதுக்குடி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாங்கி வந்ததாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து புதுக்குடி பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு சந்திரா என்பவர் கஞ்சா விற்று கொண்டிருப்பதை பார்த்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சந்திராவிடம் இருந்த 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.