Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” வசமா சிக்கிய 5 பேர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பதை தடுப்பதற்காக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதன்படி கஞ்சா விற்பனை செய்த தூத்துக்குடி தாளமுத்துநகர் சுனாமி காலனி பகுதியில் நிலோபர், முத்தையாபுரம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த அருண்குமார், முக்கானி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி, ஆறுமுகநேரி கணேசபுரத்தில் சேர்ந்த பிரேம்குமார், கோவில்பட்டி வேலாயுதபுரத்தைச் சேர்ந்த சாமுவேல் ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்து 350 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |