Categories
சினிமா தமிழ் சினிமா

“பள்ளிக்கு உதவுங்கள்”… நேர்மையாக இருந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்… நடிகர் சூர்யா.!!

பேனர் வைப்பதற்கு பதிலாக பள்ளிக்கு உதவுங்கள் என்றும், நேர்மையாக இருந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும் நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். 

சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ (23)  பள்ளிக்கரணை அருகே சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்ததில் நிலை தடுமாறி சாலையில் தூக்கி வீசப்பட்டார். பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறியதில் பரிதாபமாக  உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் நீங்கா அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தமிழக அரசியல் கட்சிகள் பேனர் வைக்க கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

Image result for actor surya speech today

இந்நிலையில் சென்னையில் காப்பான் திரைப்பட செய்தியாளர் சந்திப்பில் நடிகர் சூர்யா பேசியதாவது,  அணைத்து ஊர்களிலும் ரசிகர்கள் பேனர் வைக்க கூடாது. பேனர் வைப்பதற்கு பதிலாக பள்ளிக்கு உதவுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் வாழ்க்கையில் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதில் நேர்மையாக இருந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். வேறு ஒரு நடிகர் நடிக்க வேண்டிய படத்தில் நான் நடித்தால் அது நிச்சயம் வெற்றி பெறும் என்றும், ஒருவரின் வாழ்க்கை பற்றி பேசும் கதையை நான் எப்போதும் தவற விட மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |