Categories
உலக செய்திகள்

தொடரும் எல்லைப் பிரச்சனை…. ஒப்பந்தங்களை கடைப்பிடிக்காத பக்கத்து நாடு…. வெளியுறவுத்துறை அமைச்சரின் உரையாடல்…!!

லடாக் எல்லைப் பிரச்சினைகளின் ஒப்பந்தங்களை சீனா முறையாக  பின்பற்றவில்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்திய நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அரசுமுறை சுற்றுப்பயணமாக  3  நாட்களுக்கு ரஷ்யா சென்றுள்ளார். இந்த பயணத்தில் ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் மற்றும் பல உயர் அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் நோக்கமானது இருதரப்பு நாடுகளுக்கும் இடையில் உள்ள உறவுகளை பலப்படுத்துவாதகும். மேலும் இந்த சந்திப்பினை தொடர்ந்து இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து தங்களது பாதுகாப்பினை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஒரு ஆய்வுக் கூடத்தில் உரையாற்றினர்.

அதில் கடந்த 45 வருடங்களாக இந்திய சீன எல்லை பிரச்சனை ஏற்படாமல் இருந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் லடாக் எல்லைப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால்  நாட்டின் அமைதி குலைந்துவிட்டது எனவும் எல்லை பிரச்சனையை  தீர்க்க கடந்த ஆண்டு மாஸ்கோவில் பேச்சுவார்த்தை ஓன்று நடைபெற்றுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் போது  5 அம்ச தீர்மான ஒப்பந்தம் ஓன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தீர்மான ஒப்பந்தங்களை சீனா முறையாக பின்பற்றவில்லை என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

Categories

Tech |