பழுது பார்ப்பதற்காக பட்டறையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரியை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏர்ரனள்ளி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான மினி லாரியை வைத்து வாடகைக்கு ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் தனது மினி லாரியில் எதிர்பாராவிதமாக பழுது ஏற்பட்டதால் சென்ற மூன்று நாட்களுக்கு முன்பாக குண்டல் பட்டியில் அமைந்திருக்கும் ஒரு பட்டறையில் லாரியை நிறுத்தி வைத்துள்ளார்.
இதனையடுத்து அந்த லாரி திடீரென காணாமல் போய்விட்டது. அதன் பின் லாரியை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மினி லாரியை திருடிச் சென்றவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.