பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்ட நபர்களால் திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையின் உயர்வை கண்டித்து மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் பெரும்பாலானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டமானது கட்சியின் துணை செயலாளரான சிவபாலகுரு என்பவரின் தலைமையில் நடைபெற்றுள்ளது.
மேலும் கட்சியின் முன்னாள் பொறுப்பாளரான முபரக் முன்னிலை வகித்துள்ளார். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையின் உயர்வை குறைக்க வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதனைதொடர்ந்து இவர்கள் நெய்காரப்பட்டியிலும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.