கோவக்சின் தடுப்பூசிகளை அவசர காலப் பயன்பாட்டு ஒப்புதல் குறித்து முடிவு எடுக்கப்படும் என உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி கூறியுள்ளார்.
உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸை ஒழிப்பதற்காக தடுப்பூசிகளை தயாரித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்தியாவில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் தடுப்பூசிகளை தயாரிப்பதில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் பாரத் பயோடெக் நிறுவனமானது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்துடன் இணைந்து கோவக்சின் தடுப்பூசியை தயாரித்துள்ளது. இதற்கு இந்தியாவில் மட்டும் அவசரகால ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கப்படாமல் இருந்த நிலையில் பாரத் பயோடெக் நிறுவனம் தனது மூன்றாம் கட்ட சோதனையை தொடங்கி அது பற்றிய முடிவுகளையும் , தரவுகளையும் வெளியிட்டுள்ளது.
இந்த தரவுகளை ஆராய நிபுணர் குழு ஒன்றை உலக சுகாதார அமைப்பு நியமிக்க முடிவு செய்துள்ளது. இதனை அடுத்து அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் இணைய கருத்தரங்கம் ஒன்றை நடத்தியுள்ளனர். இந்த கருத்தரங்கத்தில் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் பேசியுள்ளார். அதில் உலக சுகாதார அமைப்பானது “பின்வரும் 4 முதல் 6 வாரங்களுக்குள் கோவக்சின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டு ஒப்புதல் குறித்து முடிவு எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.