சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வாலிபர் எதிரே வந்த லாரி மீது மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பி.துரிஞ்சிபட்டி இந்திரா காலனியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிங்காரவேலன் என்ற மகன் உள்ளார். இவர் கட்டிட மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவர் மதியம் நேரத்தில் கூட்ரோடு பகுதிக்கு சென்றுயுள்ளார். அப்போது திடிரென எதிரே வந்த லாரியானது மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே சிங்காரவேலன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.