Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு தர வேண்டும்… தொழிலாளர்களின் போராட்டம்… தென்காசியில் பரபரப்பு…!!

தொழிலாளர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள குருவிகுளம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் என சிலர் கலிங்கப்பட்டி பஞ்சாயத்தில் உள்ள தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் பெரியகுளம் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற பஞ்சாயத்து செயலாளர், தொழிலாளர்களிடம் இனிமேல் உங்களுக்கு தேசிய ஊரக திட்டத்தில் வேலை இல்லை என்றும், அவர்களை வீட்டிற்கு செல்லுமாறு தெரிவித்துள்ளார். இதனைக் கேட்ட அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் ஒன்றிணைந்து அப்பகுதியில் உள்ள சாலையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பஞ்சாயத்து செயலாளர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் நாங்கள் தேசிய ஊரக வேலை திட்டத்தில் வேலை செய்து தங்களது குடும்பத்தைப் பராமரித்து வருகின்றோம். அவ்வாறு  வேலை செய்து கொண்டிருக்கும்போது அதிகாரி வந்து திடீரென உங்களுக்கு இனிமேல் வேலை என்று கூறியதால் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் அவர்களிடம் தங்களுக்கு தேசிய ஊரக திட்டத்தில் வேலை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்த பிறகு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.

Categories

Tech |