Categories
உலக செய்திகள்

வசமாக சிக்கிய கரடி…. வேட்டையாடிய வனத்துறையினர்…. பரபரப்பான தகவல்…!!

கூடாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை இழுத்துச் சென்று கடித்து குதறிய கரடி வனத் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது.

அமெரிக்கா நாட்டில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் 65 வயதான நர்ஸ் லியா லோகன் . இவர் கலிபோர்னியாவிலிருந்து மொன்டானா  மாகாணத்திற்கு தனது சகோதரி மற்றும் தோழியுடன் சைக்கிளில் பயணம் மேற்கொண்டு ஓவாண்டே நகரை கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அடைந்துள்ளார். அங்கு அவர்கள் மூவரும் இரவு உணவை முடித்துவிட்டு தனித்தனி கூடாரங்களில் ஓய்வு எடுத்துள்ளனர். அப்போது அங்கு வந்த கரடி ஒன்று  லியாவை இழுத்துச் சென்று கடித்துக் குதறியுள்ளது.

இதனையடுத்து லியாவின் கதறல் சத்தம் கேட்ட அவரது தோழி மற்றும் சகோதரி ஓடிச்சென்று அவரை காப்பாற்றுவதற்காக கையில் கிடைத்த பொருள்களை கரடியின் மீது வீசியுள்ளனர். அதற்குள் லியா ரத்த வெள்ளத்தில் மிதந்தது கிடந்துள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து லியாவை  மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்  சிகிச்சை பலனின்றி  பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து அறிந்த வனத்துறையினர் அந்த கரடியை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அந்தக் கரடி வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது என  தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |