அமெரிக்காவில் இடிந்து தரைமட்டமான அடுக்குமாடி குடியிருப்பில் மேலும் 61 பேர் இறந்திருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா ப்ளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று கடந்த ஜூன் 25ஆம் தேதி இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதுகுறித்து தகவலறிந்த மீட்பு குழுவினர் விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியிருந்த உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து 79 பேர் உயிரிழந்தனர் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் மேலும் 61 பேரை காணவில்லை என்றும் அவர்கள் இடிபாடுகளில் சிக்கி இறந்திருக்க கூடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மியாமி-டேட் நகர மேயா் டேனியலா லெவைன் காவா கூறுகையில் இந்த சம்பவத்தின் உயிரிழப்புகள் மிகுந்த வேதனை அளிக்கிறது என்றும் கண்டுப் பிடிக்காதவர்களின் உடல் விரைவில் மீட்கப்படும் எனவும் கூறினார்.