மோட்டார் சைக்கிளில் கஞ்சாவை கடத்தி சென்ற இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள சுரண்டை பகுதியில் சட்டவிரோதமான கஞ்சாவை கடத்தி சென்று விற்பனை செய்கிறார்கள் என்று காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக 2 பேர் மோட்டார் சைக்கிளில் ஒரு மூட்டையுடன் வேகமாக சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் அவர்கள் 2 பேரையும் நிறுத்தி மூட்டையில் என்ன இருக்கிறது என்று கேட்டு சோதனை செய்துள்ளனர். அப்போது அதில் கஞ்சா இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் நெல்லை பகுதியில் வசிக்கும் வீர செந்தில் மற்றும் சோலையப்பன் என்பது தெரியவந்துள்ளது. அதன் பிறகு காவல் துறையினர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 1 1/4கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிந்த காவல்துறையினர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக வீர செந்தில் மற்றும் சோலையப்பனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.