Categories
உலக செய்திகள்

அடம்பிடித்த பெண் பயணி…. கட்டிவைத்த விமான ஊழியர்கள்…. செய்தி வெளியிட்ட ஏர்லைன்ஸ் நிறுவனம்…!!

பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவை திறக்க முயன்ற பெண்ணை  விமான ஊழியர்கள் இருக்கையில் கட்டி வைத்துள்ள காட்சி வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்கா நாட்டில் Dallas நகரில் விமான நிலையம் ஒன்று உள்ளது. அந்த விமான நிலையத்திலிருந்து Charlotteக்கு அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. இதனையடுத்து விமானம் பறந்து கொண்டிருக்கும்போது  திடீரென ஒரு பெண் கதவை திறக்க முயன்றுள்ளார். இதனை கண்ட விமான ஊழியர்கள் அவரை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.  இந்த முயற்சியில்  விமான ஊழியர்கள் காயம் அடைந்துள்ளனர். மேலும் அந்தப் பெண் அடம் பிடித்ததினால் விமான ஊழியர்கள் அவரை இருக்கையில் கட்டி வைத்து உள்ளனர். இந்த சம்பவமானது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் அமெரிக்க ஏர்லைன்ஸ் செய்தி தொடர்பாளர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “கடந்த 6ஆம் தேதி Dallas இடத்திலிருந்து Charlotteக்கு புறப்பட்ட விமானத்தில் பெண் பயணி ஒருவர் கதவை திறக்க முயன்றுள்ளார். அவரை தடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்ட விமான ஊழியர்கள்  இறுதியில் அந்த பெண்ணை இருக்கையில் கட்டி வைத்துள்ளனர். இதனை விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதன்பின் அந்த பெண் பயணியை விமானம் தரையிறங்கிய உடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |