Categories
அரசியல் மாநில செய்திகள்

ரப்பர் ஸ்டாம்பான ஓபிஎஸ்…. சர்வாதிகாரியான இபிஎஸ்…. புது சிக்கலில் அதிமுக…!!!

கடந்த ஆட்சியில் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருந்த நிலையில் எதிர்க்கட்சியாக திமுக செயல்பட்டு வந்தது. இதனையடுத்து நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 10 வருடங்களுக்கு பிறகு வெற்றியை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது .ஆனால் மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று செயல்பட்டு வந்த  அதிமுக தோல்வியை சந்தித்தது.  இவ்வாறு அதிமுக தோல்வியை சந்தித்த நிலையில் அதிமுகவை காப்பாற்ற வந்தே தீருவேன் என்று சசிகலா அதிமுக தொண்டர்களுடன் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகிறது.

இதையடுத்து சசிகலாவுடன் பேசியதாக அதிமுக தொண்டர்கள் சிலர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். இவ்வாறு நீக்கப்பட்ட அதிமுக தொண்டர்கள் சிலர் அதிருப்தியின் காரணமாக திமுகவில் இணைந்து வருகின்றனர். இவ்வாறு  அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு திமுகவில் இணைந்த அதிமுக தொண்டர்கள் தற்போது, இபிஎஸ்-ஓபிஎஸ் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் திமுகவில் இணைந்த முன்னாள் எம்பி சுந்தரம், அதிமுக சாதிக் கட்சியாக மாறிவிட்டது. ஓபிஎஸ் வெறும் ரப்பர் ஸ்டாம்பு தான். பதவி கிடைத்தால் போதும் என்று நினைக்கிறார். எடப்பாடி சர்வாதிகாரியாக இருக்கிறார் என்று விமர்சனம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |