Categories
தேனி மாவட்ட செய்திகள்

“அண்ணனுக்கு இப்படி ஆகிட்டு” சிறுமி தெரிவித்த தகவல்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி 9 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம் பகுதியில் அருண் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒன்பது வயதான கமலக்கண்ணன் என்ற மகனும் ,7 வயதான புகழினி என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் கமலக்கண்ணன்,புகழினி ஆகிய இருவரும் அருகில் இருக்கும் தனது தாத்தாவின் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து  இருவரும் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த போது கமலக்கண்ணன் எதிர்பாரதவிதமாக மின் கம்பியை பிடித்துள்ளார். அப்போது மின்கம்பியில் இருந்து பாய்ந்த மின்சாரம் கமலக்கண்ணனை தாக்கியுள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த புகழினி உடனே தனது  தாத்தாவிடம் சென்று கூறியுள்ளார். இதனையடுத்து அவர் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கமலக்கண்ணனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் கொண்டு அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கமலக்கண்ணன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த உத்தமபாளையம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |