Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாழ்க்கையே வெறுத்து போச்சு…. ஊழியர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

வயிற்று வலியால்  அவதிப்பட்டு வந்த மின்வாரிய ஊழியர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விக்கிரமசிங்கபுரம் பகுதியில் வள்ளிமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேர்வலாறு மின்வாரியத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வள்ளிமுருகன் பல நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் வள்ளிமுருகனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மனமுடைந்த வள்ளிமுருகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  வள்ளிமுருகனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த விக்கிரமசிங்கபுரம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |