Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எதுக்கு இப்படி பண்றீங்க…. மடக்கி பிடிச்சுட்டோம்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூரிலிருந்து ஆந்திரம் மாநிலத்திலுள்ள குப்பம் பகுதி மற்றும் கர்நாடகாவிற்கும் ரேஷன் அரிசியை கடத்துவதாக அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது. அந்த புகாரின்படி மாநில குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல்துறை இயக்குனர் ஆபாஷ்குமார் உத்தரவின்படி, போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மேற்பார்வையில், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜான் சுந்தர் தலைமையில் குடிமைப்பொருள் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் தனிப்படை காவல்துறையினர் வாணியம்பாடி, ஆம்பூர், நாட்டறம்பள்ளி போன்ற பகுதிகளில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது பச்சூர் கூட்ரோடு பகுதிக்கு வாணியம்பாடி வழியாக வந்த லாரியை அதிகாரிகள் மடக்கி நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில் 2 1/2 டன் அரிசி இருப்பது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து லாரியை ஓட்டி வந்த டிரைவர் பிரவீன்குமார், திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த சுபாஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்ததோடு ரேஷன் அரிசியையும், லாரியையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |