செங்கல்பட்டில் தடுப்புசி தட்டுப்பாடு காரணமாக மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் 2 நாட்களாக தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக அரசு கலை கல்லூரியின் முகப்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தடுப்பூசி போடுவதற்கு வந்த இந்த மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர். இதேபோன்று சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.
இந்த ஊர்களை சுற்றி மகேந்திரா சிட்டி, ஓரகடம் சிப்காட், மறைமலைநகர் தொழிற்பேட்டை போன்றவற்றில் வேலை பார்க்கும் பெரும்பாலான ஊழியர்கள் சிங்கபெருமாள்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் தங்கி இருக்கின்றனர். இவர்கள் பணிபுரிந்து வரும் நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே நிறுவனத்தில் அனுமதி என்றும் இல்லையெனில் சம்பளம் கிடையாது என்றும் நிபந்தனை வைப்பதால் பல பேர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து தடுப்பூசி செலுத்தி சொல்கின்றனர். ஆனால் இந்த ஊராட்சிக்கு 40 தடுப்பூசிகள் மட்டுமே ஒதுக்கபட்டு தனியார் நிறுவன ஊழியர்களை செலுத்திக் கொள்வதால் உள்ளூர்வாசிகளுக்கு தடுப்பூசி இல்லாத நிலை ஏற்படுகின்றது.