மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் கூலித் தொழிலாளியான ராஜசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜசேகர் தாராபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பொள்ளாச்சி நோக்கி வேகமாக சென்ற கார் இவரது மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜசேகரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராஜசேகர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.