மீனவரை கொலை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் இளைஞரை கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சாயல்குடி பகுதியில் மீனவரான முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஜூலை 9 ஆம் தேதியன்று இவர் கழுத்து அறுபட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் பார்த்திபன் என்பவர் மதுபோதையில் முருகனை கொலை செய்தது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் பார்த்திபனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.