Categories
உலக செய்திகள்

“அந்த நாட்டை கட்டமைப்பது ஒன்றும் எங்கள் கடமை அல்ல!”.. -அமெரிக்க அதிபர் ஜோபைடன்..!!

ஆப்கானிஸ்தான் நாட்டை கட்டமைப்பது எங்களது கடமை இல்லை என்று அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக அந்நாட்டின் அரசுக்கு ஆதரவாக இருந்த அமெரிக்க படைகளை வெளியேறுமாறு தலீபான் தீவிரவாதிகள் கேட்டுக்கொண்டனர். எனவே அதிபர் ஜோ பைடன், குறிப்பிட்ட நாளுக்கு முன்பாகவே தங்கள் படைகள் அனைத்தையும் ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பப் பெற்று விட்டார்.

இதனால் தலீபான் தீவிரவாதிகளின் ஆட்டம் மீண்டும் நாட்டில் தொடங்கிவிட்டது. எனவே அமெரிக்க அரசு ஆப்கானிஸ்தானை கைவிட்டுவிட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு பதிலளித்த ஜோபைடன், தங்கள் நாட்டின் அடுத்த தலைமுறையினரும் போரில் சிக்குவதை விரும்பவில்லை.

ஆப்கானிஸ்தான் நாட்டை கட்டமைப்பது அமெரிக்க அரசின் கடமை கிடையாது. அந்த நாட்டின் தலைவர்கள் ஒன்றாக இணைந்து செயல்பட்டு அவர்களது நாட்டின் வருங்காலத்தை சிறப்பாக உருவாக்க வேண்டும் என்று கூறினார். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினர் சுமார் 15 நாட்களில் பல மாகாணங்களை கைப்பற்றி கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இது ஆப்கானிஸ்தான் அதிபருக்கு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியிருக்கிறது

Categories

Tech |