Categories
தேசிய செய்திகள்

பந்திப்பூர் வனப்பகுதியில் காலில் காயத்துடன் சுற்றித்திரிந்த புலி… சிகிச்சை பலனின்றி இறந்தது…!!!

பந்திப்பூர் வனப்பகுதியில் காலில் காயத்துடன் சுற்றித்திரிந்த புலி ஒன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலூர் பேட்டை தாலுக்கா பகுதியை சேர்ந்த பந்திப்பூர் வனப்பகுதியில் புலி பாதுகாப்பு சரணாலயம் ஒன்று உள்ளது. இந்த பகுதியில் ஒரு புலி ஒன்று காலில் காயத்துடன் சுற்றி வந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி அதனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை மேற்கொண்ட போது காலில் பலத்த காயம் ஏற்பட்டு ஒரு கால் முறிவு ஏற்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து வனத்துறையினர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு பன்னரகட்டா உயிரியல் பூங்காவுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து மீண்டும் சாம்ராஜ்நகர் கொண்டுவரப்பட்டு குழிதோண்டி புதைக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறை அதிகாரி தெரிவித்ததாவது: “ஒரு புலி மற்றொரு புலியுடன் சண்டை இட்ட போது இந்த புலிக்கு மட்டும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் கால் முறிவு ஏற்பட்ட நிலையில் அந்த புலி உயிரிழந்தது”. என்று தெரிவித்தனர்.

Categories

Tech |