பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யத்தினர் சார்பாக போராட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் ரயிலடியில் மக்கள் நீதி மய்யம் சார்பாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்திய மத்திய மற்றும் மாநில அரசை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டம் மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில், நற்பணி மாவட்ட செயலாளர் தரும சரவணன், கிழக்கு மாவட்ட செயலாளர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மாநிலச் செயலாளர் சிவ. இளங்கோ கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியுள்ளார். இந்தப் போராட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும் நடைபெற்றது . எனவே மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சியினர் கோஷங்களை எழுப்பினர்.
இதில் நிர்வாகிகள் ரெங்கசாமி, பூமிநாதன், ரமேஷ்குமார், கமல் முருகேசன், கார்த்திக், சுரேஷ், ரெங்கேஸ்வரன், குமார் மற்றும் பலர் கலந்து கொண்டு பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதற்கு முன்னதாக இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பாரி வைத்து நூதன முறையில் போராட்டம் நடத்தியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டம் மட்டும் தான் நடத்த வேண்டும் என்றும் ஒப்பாரி வைத்து நடத்தக்கூடாது என்றும் தெரிவித்துள்ளனர். எனவே மீறி ஒப்பாரி போராட்டம் நடைபெற்றால் கைது செய்வோம் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஒப்பாரி போராட்டம் கைவிடப்பட்டது.