Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“எதிர்பார்த்த அளவுக்கு இல்ல”திறக்கப்பட்ட உழவர் சந்தை…. வேதனையில் வாடும் வியாபாரிகள் ….!!

கொரோனா ஊடரங்கிற்கு பிறகு திறக்கப்பட்ட உழவர் சந்தையில் எதிர்பார்த்த அளவு வியாபாரம் இல்லாததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு மாதவி சாலையில்  நீண்ட காலமாக உழவர் சந்தை செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமக அரசு ஊடரங்கை அமல்படுத்தியதால் இந்த உழவர் சந்தை மூடப்பட்டுள்ளது. அதன் பின் இந்த உழவர் சந்தை நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் திறக்கபட்டுள்ளது.ஆனால்  வியாபாரிகள் எதிர்பார்த்த அளவுக்கு வாடிக்கையாளர்கள் வராததால் காய்கறிகள் அதிக அளவில் விற்பனை செய்யப்படவில்லை.

மேலும் உழவர் சந்தைக்கு அருகில் கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரிகள் காய்கறிகளை விற்பனை செய்வதால் மக்கள் அங்கு பேரம்பேசி அதனை வாங்கி செல்கின்றனர். இதனால் வெளியில் அமைக்கபட்டிருக்கும் கடைகளை அகற்றி தங்களுக்கு வியாபாரம் நடக்க வழிவகை செய்யுமாறு விவசாயிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |