மைக்ரோசாப்ட் நிறுவனமானது, தங்கள் பணியாளர்களுக்கு சுமார் 1,500 டாலர்கள் போனசாக வழங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனமானது, தங்கள் பணியாளர்கள் கொரோனா காலகட்டத்திலும் போராடி வீட்டிலிருந்தே பணியாற்றுகிறார்கள் என்பதால் அவர்களை ஊக்குவிக்க சுமார் 200 மில்லியன் டாலர்கள் செலவு செய்து போனஸ் வழங்குகிறது. இது தொடர்பில் வெளியான அறிக்கையில், மைக்ரோசாஃப்டின் முதல் கால்வருடத்தின் கடைசியில் 125 பில்லியன் தொகையில் டாலர் ரொக்கமும் பிற முதலீடுகளும் இருந்தது.
இந்நிறுவனத்தின் மக்கள் தலைமை அதிகாரியான கேத்லீன் ஹோகன் கடந்த வியாழக்கிழமை அன்று இதனை அறிவித்திருக்கிறார். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கு நடுவில் உலகம் முழுக்க இந்நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு போனஸ் அளிக்கப்படும். இந்நிறுவனத்தில் சுமார் 1,75,508 பணியாளர்கள் உலகெங்கும் பணியாற்றுகிறார்கள்.
அதாவது 200 மில்லியன் டாலர்கள் போனஸ் என்பது அதிகமாக தான் இருக்கிறது. எனினும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தினசரி சம்பாதிக்கும் லாபத்தை விட இது குறைந்தது தான்.