தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஐந்து வருடங்களாக ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர். லிவ்விங் டு கெதர் முறைப்படி இருவரும் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் நயன்தாராவுக்கு வயதாகி கொண்டே போவதால் சீக்கிரம் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவருடைய பெற்றோர்கள் விரும்புகின்றனர். அதேபோன்று விக்னேஷ் சிவனுடைய வீட்டிலும் நயன்தாராவை விரைவில் தங்கள் மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார்கள்.
இந்நிலையில் நயன்தாராவின் தந்தைக்கு வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் தன்னுடைய மகளுக்கு சீக்கிரம் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் இதற்கு நயன்தாரா மௌனம் காத்து வருகிறார். இதற்கு மத்தியில் நயன்தாராவின் ரசிகர்கள் எப்பொழுது திருமணம் செய்து கொள்வீர்கள் என்று கேட்டு வரும் நிலையில் நயன்தாரா ஓகே சொல்லாததால் கவலையில் உள்ளனர்.