தமிழகத்தில் கொரோனா அச்சறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை என்பதால் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் மத்திய அரசு சான்றிதழை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கும் மத்திய அரசின் Fit India Movement சான்று கட்டாயமாகும். இதற்கு www.fitindia.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து அனைத்து பள்ளிகளும் சான்று பெற வேண்டும். ஆனால் இதுவரை மிகக் குறைவான பள்ளிகளே பதிவு செய்துள்ளன. எனவே பதிவு செய்யாத பள்ளிகள் ஜூன் 20-ஆம் தேதிக்குள் பதிவு செய்து சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.