Categories
உலக செய்திகள்

தலீபான்கள் அட்டூழியம்.. இந்திய தூதரகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அதிகாரிகள்..!!

காந்தஹாரில் இருக்கும் இந்திய தூதரகம் தற்காலிகமாக அடைக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவலை இந்திய வெளியுறவுத்துறை மறுத்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் பல வருடங்களாக தலிபான் தீவிரவாதிகளுக்கும் அமெரிக்க படையினருக்கும் இடையில் போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அவர்களுக்கு இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அமெரிக்கப் படைகள் நாட்டிலிருந்து வெளியேறுமாறு தலீபான் தீவிரவாதிகள் கூறியதால், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதிக்கு முன்பாக ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க படைகள் அனைத்தும் வெளியேற்றப்படும் என்று தெரிவித்திருந்தார்.

எனவே படைகள் நாட்டிலிருந்து திரும்பப் பெறப்பட்டு வருகிறது. இதனால் நாட்டின் முக்கிய மாகாணங்களை தலீபான்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். ஏறக்குறைய சுமார் 85% நிலப்பரப்பை கைப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முக்கிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேறி வருகிறார்கள்.

மேலும் காந்தஹாரில் இருக்கும் இந்திய தூதரகத்தில் 50 அதிகாரிகள் வெளியேறியதாகவும் தூதரகம் தற்காலிகமாக அடைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை இந்த தகவலை மறுத்துள்ளது. தூதரகத்தில் உள்ள அதிகாரிகள் வெளியேறியது உண்மை. எனினும் தூதரகம் அடைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியா, தலீபான் தீவிரவாதிகளின் செயல்பாடுகளை உற்றுநோக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |