Categories
உலக செய்திகள்

விண்வெளி பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து…. சாதனை படைக்க போகும் இந்திய வம்சாவளி பெண்…!!

இங்கிலாந்து நாட்டின் Virgin Group தலைவரான ரிச்சர்ட் பிரான்சன் அவரின் விண்வெளி பயணக் குழுவில் இந்திய வம்சாவளி பெண் இடம் பெற்றுள்ளார்.

விண்வெளி சுற்றுலா என்பது அதிசயமாகவும் ,சாதனையாகவும் பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இங்கிலாந்தின் ரிச்சர்ட் பிரான்சன் என்பவர் உலகின் கோடீஸ்வரர்களில் ஒருவரும் Virgin Group தலைவரும் ஆவார். இவரால்  2004 ல் தொடங்கப்பட்ட Virgin Galactic  விண்வெளி நிறுவனத்தின் மூலம் மெக்சிகோவிலிருந்து  VSS Unity ஓடத்தில் விண்வெளிக்கு சென்றுள்ளனர். மேலும் இவருடன் சேர்ந்து 11 பேர் கொண்ட குழு  ஓன்று பயணிக்கின்றது.

இதில் இந்திய வம்சாவளிப் பெண்ணான சிரிஷா பந்த்லா இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.  சிரிஷா பந்தலா ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூரில் பிறந்து டெக்சாஸ் ஹூஸ்டனில் வளர்ந்தவர். இதனை அடுத்து Virgin Galactic  நிறுவனத்தின்  உள்ள Spaceship to Unity குழுவிலுள்ள 11 பேருடன் சேர்ந்து விண்வெளிக்கு பயணிக்கின்றார். அதிலும் குறிப்பாக கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸிற்கு அடுத்ததாக சிரிஷா பந்தலா செல்வது பெருமைக்குரிய வரலாற்று நிகழ்வாகும்.

விண்வெளி சுற்றுலாவில் புதிய சாதனையை படைக்கும் இங்கிலாந்தின் ரிச்சர்ட் பிரான்சன் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பரில்  Virgin Galactic  நிறுவனத்தின் சார்பாக லண்டனுக்கு மும்பையில் இருந்து நேரடி விமான சேவையை தொடங்கி வைத்துள்ளார்.  இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர் டி.என்.ஏ சோதனை மூலம் தனது மூதாதையர்கள் தமிழகத்திலுள்ள கடலூரைச் சேர்ந்தவர்கள் என அறிந்து கொண்டேன் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து தனது  மூதாதையர்களில் ஒருவரான ஆர்யா என்ற இந்திய பெண்  நான்கு தலைமுறைகளுக்கு முன் கடலூரில் வாழ்ந்துள்ளார் என்பதையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

ரிச்சர்ட் பிரான்சன் Virgin Galactic  நிறுவனத்தின் அடையாளமாக அவரது மூதாதையரான ஆர்யா அவர்களின் படத்தை வைத்திருப்பதாகவும்  தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அமேசான் நிறுவனத்தின் முன்னாள் Ceo ஜெஃப் பெசோஸ் தான் முதலில் புளூ ஆரிஜின் நிறுவனத்தை தொடங்கினார். இவர் வருகிற ஜூலை 20 ஆம் தேதி இந்த நிறுவனத்தின் மூலமாக விண்வெளி பயணம் செல்ல இருக்கிறார். இந்த விண்வெளி பயணத்தை முந்தும் விதமாக ரிச்சர்ட் பிரான்சன் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Categories

Tech |