முதல் டோஸ் தடுப்பூசிக்கும், இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்கும் இடையிலான நேரத்தை பாதியாக குறைக்கும் நடவடிக்கைகளை பிரிட்டன் மேற்கொண்டு வருகிறது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை ஒழிப்பதற்காக உலகம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பிரிட்டனின் வரும் ஜூலை 19ஆம் தேதி முதல் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்படவுள்ளதால் மக்களும், அரசு அதிகாரிகளும் தளர்வுகளை நோக்கி காத்துக்கொண்டிருக்கின்றனர். மேலும் ஜூலை 19 ஆம் தேதியை “Freedom Day) என்றும் கூறிவருகின்றனர்.
இதனிடையே கொரோனா எண்ணிக்கை சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் தடுப்பூசி செலுத்துவதில் அரசு சில திட்டங்களை தொடங்கவுள்ளது. அதில் முதல் டோஸ் தடுப்பூசிக்கும், இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்கும் இடையே இருக்கும் 8 வார இடைவெளியை பாதியாக குறைக்க திட்டமிட்டு நோய் தடுப்பு துறையினரிடம் ஆலோசனை பெற்று வருகின்றது. மேலும் இது தொற்று எண்ணிக்கையை முற்றிலும் தடுக்கும் என்றும் அடுத்தகட்ட அலையிலிருந்து நாடு பாதுகாப்பாக இருக்கும் என்று கூறி அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.