Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

யாரு இந்த வேலைய செஞ்சிருப்பா…? அடுத்தடுத்து அரங்கேறிய சம்பவம்…. வலை வீசி தேடும் காவல்துறையினர்….!!

அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை பகுதியில் கட்டிட காண்டிராக்டரான சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகில் வசந்த குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இரு குடும்பத்தினரும் வெளியே சென்ற நேரத்தில் மர்ம நபர்கள் சிவக்குமார் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் தங்க நகை மற்றும் 50 லட்ச ரூபாய் பணம் போன்றவற்றை திருடி சென்றுள்ளனர்.

அதன்பிறகு வசந்தகுமார் வீட்டில் இருந்த 2 பவுன் தங்கம் மற்றும் 37 ஆயிரம் ரூபாய் பணம் போன்றவற்றையும் மர்ம நபர்கள் திருடி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தடவியல் நிபுணர்கள் அங்கு பதிவான தடையங்களை சேகரித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அடுத்தடுத்த வீடுகளில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |