அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தில் விக்னேஷ் சிவன் பாடலாசிரியராக பணியாற்றியுள்ளார் .
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தில் ஹூமோ குரேஷி கதாநாயகியாகவும், கார்த்திகேயா வில்லனாகவும் நடிக்கின்றனர். மேலும் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் அப்டேட்டுக்காக ஒரு வருடத்திற்கு மேலாக அஜித் ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இன்று சர்ப்ரைஸாக வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டிருந்தது .
மேலும் இந்த வருடம் இறுதியில் இந்த படம் வெளியாகும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் வலிமை படத்தில் இயக்குனரும், பாடலாசிரியருமான விக்னேஷ் சிவன் பணியாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வலிமை படத்தில் விக்னேஷ் சிவன் அஜித்துக்காக பாடல் எழுதியுள்ளாராம். ஏற்கனவே இவர் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு பாடல் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.