நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்களுக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தான் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் வலிமை அப்டேட் கிடைக்கும் என்று ரசிகர்களுக்கு தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியானது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் வலிமை போஸ்டர் வெளியானதையடுத்து வானதி சீனிவாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், நான் வெற்றி பெற்றவுடன் வலிமை அப்டேட் கிடைக்கும் என்று சொன்னேன். இப்போது வந்துவிட்டது என்று பதிவிட்டுள்ளார்.